ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இருவருக்கும் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Source: https://samugammedia.com/the-court-issued-an-order-for-akhila-virajs-estate-matters-1787039750
