Home இலங்கை அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடல் !!

அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடல் !!

0
image

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மத்திய மாகாண உள்ளூராட்சித்திணைக்கள கூட்ட அரங்கத்தில் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த்  கலந்துகொண்டதுடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாகச் செயற்படுத்திக்கொள்ளல், அது தொடர்பான பிரச்சினைகள், மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார். 

இக்கூட்டத்திற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உட்பட பல்வேறு உள்ளூராட்சி அதிகார சபைகளின் கௌரவ தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/development-program-discussion-1783504005

NO COMMENTS

Exit mobile version