Home இலங்கை அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

0
image

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன மாவட்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரசோதகர்    முதித பிரியங்கரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

உஹனவில் 8000 மில்லிகிராம் ஹெரோயின் மீட்பு

உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000 மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திஸ்ஸபுர, பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது இளைஞன்   கைது செய்யப்பட்டார்.

பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.

பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கரங்கவாவில் மேலும் நால்வர் கைது

உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர். இதன்போது அவர்களிடம் இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான மக்புல் (43383), சந்திரசேன (67664) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான திஸ்ஸநாயக்க (86679), சுதேஷ் (21016), சஞ்சீவ (91287), சுனில் (95062), மதனசிங்க (35793) உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/police-crackdown-in-ampara-7-drug-dealers-arrested-with-heroin-1788764791

NO COMMENTS

Exit mobile version