Home இலங்கை ஆசிரியர் அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு முரண்பாடுகள் உடனடியாக தீர்க்க வேண்டும் -ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

ஆசிரியர் அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு முரண்பாடுகள் உடனடியாக தீர்க்க வேண்டும் -ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

0
image

ஆசிரியர்’அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில்  (13) இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் 

2025.07.01ல் இருந்து பதவி உயர்வு முறைமையை மாற்றி பரீட்சை மூலமாக கூறப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எந்தவித செயல்பாடும் இல்லை.

 

சம்பள முரண்பாடாக மூன்றில் ஒரு பங்கு தான் வழங்கப்பட்டுள்ளது மீதி இரு பங்குகளையும் வழங்க வேண்டும். 

இது போன்று வலயரீதியான பிரச்சினைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு இதனையும் தீர்க்க வேண்டும். 

இது தொடர்பில் கடந்த சனிக் கிழமை பிரதமருடன் பேசியுள்ளோம் இதற்கான தீர்வை எதிர்வரும் 30க்குல் தீர்வு வேண்டும்.

 அநேகமாக தொழிற் சங்கத் தலைவர்களே இதனுடன் இணைந்த அமைச்சர்களாக உள்ளனர். 

அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இடமாற்ற சபை உருவாக்கப்படுகிறது சில இடங்களில் முறையற்ற இடமாற்றம் நடைபெறுகிறது.

இடமாற்றம் முறையாக கொள்கைக்கு அமைய இடம் பெறவேண்டும்.

இதனால் பல ஆசிரியர்கள் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதிபர் நியமனங்கள் அரசியல் தலையீடு இன்றி வழங்கப்பட வேண்டும். 

Source: https://samugammedia.com/conflicts-over-salary-increases-and-promotions-among-teacher-principals-should-be-resolved-immediately—joseph-stalin-1781506558

NO COMMENTS

Exit mobile version