Home இலங்கை ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா லேகியம் விற்பனை ஒருவர் கைது

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா லேகியம் விற்பனை ஒருவர் கைது

0
image

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/sale-of-cannabis-lehyam-under-the-guise-of-an-ayurvedic-shop-one-arrested-1789369670

NO COMMENTS

Exit mobile version