Home இலங்கை இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ரூ.2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் பொலிஸ் அதிகாரி கைது

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ரூ.2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் பொலிஸ் அதிகாரி கைது

0
image

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள் தணிக்கை நடவடிக்கையின் போது, குறித்த நிதி முறைகேடு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பெறப்படும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும்.

எனினும், இங்கினியாகல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த குறித்த வருமானப் பணத்தை உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல், சந்தேகநபரான பெண் பொலிஸ் அதிகாரி கையாடல் செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி உதவி பொலிஸ் அதிகாரி (1) சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/rs-29-lakh-financial-scam-at-inginiyakal-police-station-woman-police-officer-arrested-1785668689

NO COMMENTS

Exit mobile version