Home இலங்கை இரத்மலானையில் நடுரோட்டில் பாய்ந்த தோட்டாக்கள்- தப்பி ஓடிய மர்ம நபர்கள்!

இரத்மலானையில் நடுரோட்டில் பாய்ந்த தோட்டாக்கள்- தப்பி ஓடிய மர்ம நபர்கள்!

0
image

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரத்மலானை கந்தவல வீதி வழியே முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திடுக்கிடும் சம்பவம் தொடர்பான அதிர்ச்சிகரமான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பிச் சென்ற சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகத்தீவிர விசாரணைகளையும் தேடுதல் வேட்டையையும் தொடங்கியுள்ளனர்.

Source: https://samugammedia.com/bullets-fired-in-the-middle-of-the-road-in-ratmalana–mysterious-individuals-fled-the-scene-1785592898

NO COMMENTS

Exit mobile version