Home இலங்கை இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் ரணிலை சந்தித்தார்!

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் ரணிலை சந்தித்தார்!

0
image

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக வெய் ஹுவாசியாங் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் சீனாவின் பிரதி தூதுவர் ஸு யான்வேய், ஆலோசகர் மேய் ஜிங் மற்றும் மூன்றாவது செயலாளர் ஜின் என்ஸே ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய சீனத் தூதுவராக பொறுப்பேற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் வெய் ஹுவாசியாங் மேற்கொண்டுள்ள இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பான முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.

Source: https://samugammedia.com/the-new-chinese-ambassador-to-sri-lanka-met-ranil-1789541155

NO COMMENTS

Exit mobile version