Home இலங்கை இலங்கையில் இன்று வானிலை மாற்றம்

இலங்கையில் இன்று வானிலை மாற்றம்

0
image

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (27) 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது திடீரென வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/weather-change-in-sri-lanka-today-1787798224

NO COMMENTS

Exit mobile version