Home இலங்கை இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

0
image

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். 

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.

சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ஆம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.அஞ்சலி நிகழ்வில் பிரகாஷின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/5th-death-anniversary-of-young-journalist-gnanaprakasam-prakash-observed-in-jaffna-1788425898

NO COMMENTS

Exit mobile version