Home இலங்கை ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள்

ஈஸ்டர் படுகொலை வழக்குத் தீர்ப்பு; பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள்

0
image

ஈஸ்டர் படுகொலை வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இன்று அதிகாலை 2.00 மணியளவில், வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேர் மற்றும் விடுவிக்கப்பட்ட 9 பேர் உட்பட மொத்தம் 24 பேரும் சிறைச்சாலை பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தண்டனை வழங்கப்பட்டவர்களின் அசையும் , அசையா சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இருந்த குற்றவாளிகள் சிலர் ஊடகங்களுக்குத் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். 

குறிப்பாக, மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், தீர்ப்பு குறித்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என்ற கோணத்தில் கருத்து வெளியிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்த வழக்கில், கடந்த 2 வருடங்களாகத் தொடர்ச்சியாக தினசரி அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

இவ்வாறு நீண்ட மற்றும் முறையான நீதித்துறை விசாரணைகளுக்குப் பிறகே மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 

CCTV கேமராக்கள் பொருத்தப்பட்ட பொலிஸ்  வாகனங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

தண்டனை வழங்கப்பட்டவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் தமது கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பினர்.

Source: https://samugammedia.com/easter-massacre-case-verdict-criminals-taken-to-jail-under-tight-security-1790137273

NO COMMENTS

Exit mobile version