Home இலங்கை “எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்” கிளிநொச்சியில் போராட்டம்

“எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்” கிளிநொச்சியில் போராட்டம்

0
image

 “எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்” என அரசை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் நடைபெற்றது.

மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், சிவில் அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

Source: https://samugammedia.com/hand-over-our-ancestral-lands-to-us-protest-in-kilinochchi-1787301749

NO COMMENTS

Exit mobile version