Home இலங்கை ஐ.தே.க.–ஐ.ம.ச. இணைவு அவசியம்; நவீன் திஸாநாயக்க வலியுறுத்தல்

ஐ.தே.க.–ஐ.ம.ச. இணைவு அவசியம்; நவீன் திஸாநாயக்க வலியுறுத்தல்

0
image

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பலமானதொரு எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்புவது தற்போதைய காலகட்டத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (15) நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து ரணில் விக்ரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதற்கமைய, இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும், இரு கட்சிகளும் ஒன்றிணைவதே அனைவரினதும் ஒரே எதிர்பார்ப்பு எனவும் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தினார். 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறுவது இன்றியமையாத ஒன்றாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துள்ளதாகவும், அவர்கள் வேறு கட்சிகளுடன் இணைய மாட்டார்கள் என்றும் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/merger-of-unp-and-sjb-essential-navin-dissanayake-emphasizes-1784118651

NO COMMENTS

Exit mobile version