Home இலங்கை கற்கோவளத்தில் திடீர் தீ… சில நிமிடங்களில் என்ன நடந்தது?

கற்கோவளத்தில் திடீர் தீ… சில நிமிடங்களில் என்ன நடந்தது?

0
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் வளர்ந்திருந்த சம்பு புல் பகுதியில் நேற்று தீடீர் தீப்பற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் கடற்கரை பகுதியில் தொடங்கிய இந்த தீ, சம்பு புல் பரப்பில் வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பிரதேச மக்கள் உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணனுக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர், பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு தீயணைப்பு வாகனம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனையடுத்து பிரதேச சபையின் நீர்தாங்கி வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன், பிரதேச மக்கள், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று ஒருங்கிணைந்த உதவிகளை வழங்கியுள்ளனர். 

பின்னர் கடற்படையினரும் தங்கள் நீர்தாங்கி வாகனத்துடன் வந்து தீயணைப்பு பணிகளில் இணைந்தனர்.

சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு நீடித்த முயற்சிகளின் பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை விரைவாகக் கட்டுப்படுத்த வடமராட்சி பிரதேசத்திற்கு நிரந்தர தீயணைப்பு வாகனம் அவசியம் என பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://samugammedia.com/sudden-fire-in-karkovalam-what-happened-in-a-few-minutes-1780723534

NO COMMENTS

Exit mobile version