Home இலங்கை களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு 25 பேர் கைது

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு 25 பேர் கைது

0
image

ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பிரதேசத்தில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முற்றுகையின் போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 14 படகுகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பல உபகரணங்களையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஹொரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரோஹணை ஓலுகலவின் ஆலோசனையின் பேரில் இந்த விசேட முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/25-arrested-for-illegal-gem-and-sand-mining-in-the-kalu-ganga-1785242278

NO COMMENTS

Exit mobile version