Home இலங்கை காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் சேவையை இன்று ஆரம்பித்த சிவகங்கை கப்பல்!

காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் சேவையை இன்று ஆரம்பித்த சிவகங்கை கப்பல்!

0
image

நாகபட்டினத்தில் இருந்து இன்று காலை  பயணத்தை ஆரம்பித்த, சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இன்று காலை 7.55 மணியளவில் நாகபட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பல்,  பி.ப 12.55 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. பின்னர் மீண்டும் 2.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.

இதன்போது இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கைக்கு வந்ததுடன், 79 பயணிகள் இலங்கையில் இருந்து இந்தியாவை நோக்கிப்  பயணித்தனர்.

குறித்த கப்பலானது சில வாரங்களுக்கு  முன்னர் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணித்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக சேதமடைந்தது. இதனால் ஒரு சில வாரங்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை.

அதனைத் தொடர்ந்து சிவகங்கை கப்பலானது மீண்டும் இன்றுமுதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/sivaganga-ferry-starts-kankesanthurai—nagapattinam-passenger-service-today-1780487731

NO COMMENTS

Exit mobile version