Home இலங்கை காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு – கிளிநொச்சியில் பரபரப்பு

காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு – கிளிநொச்சியில் பரபரப்பு

0
image

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர், கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/missing-government-officer-recovered-dead-from-a-dilapidated-well—stir-in-kilinochchi-1780823034

NO COMMENTS

Exit mobile version