Home இலங்கை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு !

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு !

0
image

தீ பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு  முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ அனர்த்தங்கள் அதிகளவு பதிவாகி வருகின்ற நிலையில் தீ விபத்து வராது தடுப்பது தொடர்பாகவும் தீ விபத்து ஏற்பட்டவுடன் தீ பரவலை தடுப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு செயலமர்வு  முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர்களால்  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் M.அழகக்கோன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/awareness-workshop-for-kilinochchi-kandawela-divisional-secretariat-officers-1781523605

NO COMMENTS

Exit mobile version