Home இலங்கை கிளிநொச்சி வர்த்தகர்களை அச்சுறுத்தும் வாள்வெட்டு குழுக்கள்! பாதுகாப்பு கோரி போராட்டம்

கிளிநொச்சி வர்த்தகர்களை அச்சுறுத்தும் வாள்வெட்டு குழுக்கள்! பாதுகாப்பு கோரி போராட்டம்

0
image

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் இணைந்து இன்று (18) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜிடம் கையளித்தனர்.

கிளிநொச்சி நகரில் வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள் வெட்டுக் குழுக்களால் தொடர்ச்சியாக வாள் வெட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கிளிநொச்சி நகரில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/knife-wielding-gangs-threatening-kilinochchi-traders-protest-demanding-safety-1789724683

NO COMMENTS

Exit mobile version