Home இலங்கை குடும்பத்தினருடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் – நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

குடும்பத்தினருடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் – நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

0
image

குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் துயரம் மூதூர் – மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி இன்று (10)  சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த சந்திரரூபன் ஜதுர்சன் வயது (11) என தெரியவருகிறது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது –

குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முயற்சித்தபோது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Source: https://samugammedia.com/tragedy-strikes-a-boy-visiting-with-his-family–he-drowns-and-loses-his-life-1783786083

NO COMMENTS

Exit mobile version