Home இலங்கை குருவிட்ட சிறை மோதலில் இருவர் பலி! கைதிகள் நால்வர் காயம்! – கண்ணீர்புகை பிரயோகம்

குருவிட்ட சிறை மோதலில் இருவர் பலி! கைதிகள் நால்வர் காயம்! – கண்ணீர்புகை பிரயோகம்

0
image

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை ஏற்பட்ட  மோதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று காலை கைதிகள் மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் போது, சிறைச்சாலைக்குள் அமைந்துள்ள வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-killed-in-a-clash-at-guruvittu-prison-four-prisoners-injured–tear-gas-used-1786076531

NO COMMENTS

Exit mobile version