பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கு மற்றும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர் தொடர்பான ஏனைய வழக்குகளை அவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Source: https://samugammedia.com/explanation-again-to-kehelbathar-padmev-1788428439
