Home இலங்கை சிராஜ் வீதியை புனரமைக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சிராஜ் வீதியை புனரமைக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0
image

கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக குறித்த வீதி புனரமைக்கப்படாமல் மணல் வீதியாக காணப்படுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தவிசாளரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, ஜனாதிபதி கவனம் செலுத்தி தமது வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/people-stage-a-protest-demanding-the-redevelopment-of-siraj-street-1783854921

NO COMMENTS

Exit mobile version