Home இலங்கை சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்கு! அமைச்சர் சந்தன அபேரத்ன எச்சரிக்கை!

சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்கு! அமைச்சர் சந்தன அபேரத்ன எச்சரிக்கை!

0
image

நாட்டில் 11 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்காக மாறியுள்ளதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் பள்ளம பகுதியில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்காலச் சமூகத்தில் குடும்பக் கட்டமைப்பு ஒரு முக்கிய சமூக அலகாகப் பலவீனமடைந்து வருவதே இத்தகைய விபரீதங்களுக்கு முக்கிய காரணம்.

மேலும் பொதுமக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் நாட்டின் சாதாரண குடிமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உள்ளது. அத்துடன், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு.

நாட்டில் 11 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான இலக்காக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/children-are-the-main-target-of-drug-traffickers-minister-chandan-aberathna-warning-1780831315

NO COMMENTS

Exit mobile version