Home இலங்கை சீனத் தூதுவருடன் மஹிந்த சந்திப்பு – பரிசாக வந்த சீனக் கலை!

சீனத் தூதுவருடன் மஹிந்த சந்திப்பு – பரிசாக வந்த சீனக் கலை!

0
image

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து, இலங்கைக்கான சீனத் தூதுவராக தனது கடமைகளை ஆரம்பித்த வெய் ஹுவாசியாங் அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, சீன நாகரிகத்தின் ஆழமான அர்த்தத்தை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வகையில், பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய சிறப்புப் புத்தகமொன்றை சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கலாசாரத்தையும் மக்களையும் சீனா அன்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், இரு நாடுகளும் நட்புறவு மற்றும் மூலோபாய ஒத்துழைப்புடன் இதுவரை பயணித்த பாதையையும் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கும் முன்னாள் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/mahinda-meets-with-the-chinese-ambassador–chinese-art-came-as-a-gift-1789019747

NO COMMENTS

Exit mobile version