Home இலங்கை டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு 68 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள்

டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு 68 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள்

0
image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், கடந்த 11 ஆம் திகதி ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,071 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (12) தினம் அந்த எண்ணிக்கை 601 இனால் அதிகரித்துள்ளது. 

இதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36,118 ஆகப் பதிவாகியுள்ளது. 

அத்துடன், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,112 ஆகக் காணப்படுகிறது. 

அதேபோன்று, கொழும்பு மாவட்டத்தில் 13,791 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் 13,293 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். 

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/surge-in-dengue-spread-number-of-cases-crosses-68000-1783919176

NO COMMENTS

Exit mobile version