நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 391,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அதன் விலை 9,000 ரூபாவால் குறைந்து 382,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக மேலும் 2,000 ரூபாவால் தங்க விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய சந்தை நிலவரங்களின்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கிராம் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 43,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்துள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Source: https://samugammedia.com/gold-prices-changed-twice-today-jewelry-lovers-are-delighted-1781858821
