Home முக்கியச் செய்திகள் தற்போது கிடைத்த விசேட செய்தி

தற்போது கிடைத்த விசேட செய்தி

0

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது.

ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்படுகிறது.

ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை வழங்குவதற்காக பாராளுமன்றம் அழைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அன்றைய தினம் நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதாரம் சீர்குலைந்தமைக்கான நிலை போன்றவை குறித்து அவர் அறிக்கை வெளியிட உள்ளார்.

பாராளுமன்றம் வழமை போன்று 9ஆம் திகதி கூடவிருந்தது. பாராளுமன்றம் எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூடவுள்ளதாக அனைத்து பாராளுமன்றம் உறுப்பினர்களுக்கும் அறிவிக்கும் பணிகளில் பாராளுமன்றம் ஈடுபட்டுள்ளது.

மேலும், 2ம் திகதிக்கு பிறகு பாராளுமன்ற  கூட்டத்தொடரை முடிவு செய்ய, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம், 28ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version