Home இலங்கை திருமணத்திற்கு எதிர்ப்பு! காதலி வீட்டருகே இளைஞன் எடுத்த விபரீத முடிவு

திருமணத்திற்கு எதிர்ப்பு! காதலி வீட்டருகே இளைஞன் எடுத்த விபரீத முடிவு

0
image

  

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது காதலியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரிவிக்கப்படுகின்றது. 

காதலியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சூழ்நிலையால் மனமுடைந்த அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

எனினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/opposition-to-marriage-a-shocking-decision-by-the-young-man-near-his-girlfriends-house-1784699932

NO COMMENTS

Exit mobile version