Home இலங்கை தென், கிழக்குக் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்குக் கடும் எச்சரிக்கை!

தென், கிழக்குக் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்குக் கடும் எச்சரிக்கை!

0
image

தென் மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் கொந்தளிப்பான வானிலை நிலவுவதால், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவித்தலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடிக்கச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பிற கடற்பகுதிகளில் இருந்து வரும் மீன்பிடிப் படகுகளும் இந்த அபாயகரமான கடற்பிரதேசத்திற்குள் நுழையவோ அல்லது அங்கு மீன்பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் வானிலை மண்டலத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பொறுப்புடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://samugammedia.com/rough-seas-in-the-south-and-east-severe-warning-for-fishermen-1786031820

NO COMMENTS

Exit mobile version