மூதூர் பிரதேச சபையின் கீழுள்ள தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா இன்று சனிக்கிழமை (29) காலை சிறுமலான மூலம் துப்புரவு செய்யப்பட்டது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.டி.எம்.தாஹிஸ் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இவ் சிரமதானம் நடைபெற்றது.
மூதூர் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பொழுதுபோக்கு பூங்காவை சிரமதானம் செய்து தூய்மைப்படுத்தினர் .
இதில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எப்.பாஹிம்,தோப்பூர் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி அஸ்ரா,வருமான வரி உத்தியோகத்தர் திக்ருல்லா ஆசிக்,சுகாதார மேற்பார்வையாளர் நஹீம்,இக்பால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
