Home இலங்கை நாட்டின் இரு பகுதிகளில் மர்ம மரணங்கள் – சடலங்கள் மீட்பு! விசாரணை தீவிரம்

நாட்டின் இரு பகுதிகளில் மர்ம மரணங்கள் – சடலங்கள் மீட்பு! விசாரணை தீவிரம்

0
image

கம்பஹா – பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நேற்று (13) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் சுமார் 40 – 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சுமார் 5 அடி 3 அங்குலம் உயரமுடைய, குட்டையான தலைமுடி கொண்டவர் எனவும், பச்சை நிற சட்டை மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதேவேளை, குருநாகல் – மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹதெனிய பகுதியிலுள்ள காணி ஒன்றில் நேற்று நேற்று  (13) மாலை பாழடைந்த கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் வேவுட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகளுக்காக, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் தற்போது பொலிஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளில் மாவத்தகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  

Source: https://samugammedia.com/mysterious-deaths-in-two-parts-of-the-country–bodies-recovered-investigation-intensifies-1781419624

NO COMMENTS

Exit mobile version