நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் இன்று (24) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டில் 80,114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுதல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி வைத்திய ஆலோசனையைப் பெறுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
Source: https://samugammedia.com/dengue-deaths-in-the-country-rise-to-59–80114-patients-recorded-1784871814
