Home இலங்கை நாளை ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் வெப்பம் – பல பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை

நாளை ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் வெப்பம் – பல பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை

0
image

 

இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண், நாளை பகல் நேரங்களில் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/tomorrow-the-heat-will-reach-alert-levels—urgent-warning-for-many-areas-1785338776

NO COMMENTS

Exit mobile version