Home இலங்கை பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க 76 விவசாயிகளுக்கு Air Gun

பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க 76 விவசாயிகளுக்கு Air Gun

0
image

குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து விவசாயிகளின் விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், 76 விவசாயிகளுக்கு Air Gun-களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்  “உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டம் – 2026”  கீழ், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த Air Gun-கள் 50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட விவசாய பணிப்பாளர் தரங்கிகா ஷியாமலி, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் அருந்ததி வாசனா ஜயசுந்தர, கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, Air Gun-களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

Source: https://samugammedia.com/air-guns-provided-to-76-farmers-to-protect-crops-from-wild-animals-1790497663

NO COMMENTS

Exit mobile version