Home இலங்கை பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நாலாவது நாள் அஞ்சலி

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நாலாவது நாள் அஞ்சலி

0
image

தியாக திலீபன் அவர்களது 39 வது ஆண்டு நினைவேந்தலின் 4 ம் நாள் நினைவேந்தல் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் பருத்தித்துறை நினைவுத் தூபியில் இன்றுகாலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆம்பித்து வைக்க பருத்தித்துறை நகர பிதா வின்சன் டி போல்  டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தி மலர அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மற்றும் நகரசபை  உறுப்பினர்கள்,  சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்

 

Source: https://samugammedia.com/fourth-day-tribute-to-thyaga-deepam-thileepan-in-point-pedro-1789729955

NO COMMENTS

Exit mobile version