Home இலங்கை பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – போராட்டகாரருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் பொலிசார் வழக்குத் தாக்கல்!

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – போராட்டகாரருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் பொலிசார் வழக்குத் தாக்கல்!

0
image

பலாலியில்  இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு பலாலி பொலிசாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கில், 2026.08.16 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின் ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காலை 09.30 மணி முதல் 13.00 மணி வரை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி T சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக குறிப்பிட்டே, 2026.08.17 அன்று பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கம் MA/MC/PC/07381/26-B இன் கீழ் குறித்த சந்தேக நபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன், 2026.10.22 அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும், அன்றையதினம் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அதன்படி வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், M. குணசேகரம் மற்றும்  பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் மீதே பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்புடத்தக்கது

Source: https://samugammedia.com/palali-land-release-protest—police-file-a-case-in-mallakam-court-against-the-protester-1787030699

NO COMMENTS

Exit mobile version