Home இலங்கை பிள்ளையானுக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பிள்ளையானுக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

0
image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (24) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இணையவழி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு நீதவான் ஏ. தர்ஷினி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, கல்லடியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய மேலும் ஒரு குற்றச்சாட்டும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வழக்கின் உண்மைகள் மற்றும் விசாரணையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதே ஆண்டு மே 22ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை, மேலும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுனியா பகுதியில் ஆயுதமேந்திய குழுவொன்று ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

Source: https://samugammedia.com/the-court-issued-an-order-for-the-child-today-1784878050

NO COMMENTS

Exit mobile version