Home இலங்கை புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டது கள்ளியாற்று திட்டம்; நீண்டகால போராட்டத்துக்கு தீர்வு

புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டது கள்ளியாற்று திட்டம்; நீண்டகால போராட்டத்துக்கு தீர்வு

0
image

மிக நீண்டகாலமாக புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து வந்த நன்னீர் பிரச்சினைக்கு தீர்வாக கள்ளியாற்று திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக நன்னீர் பிரச்சினை இருந்துவந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். 

தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் குறித்த பிரச்சினை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்த சூழ்நிலையில் அங்கிருந்த அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கள்ளியாற்றுத் திட்டத்தை  ஆரம்பிப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர். 

அதன் ஒரு கட்டமாக யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை, விவசாயத்துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடிய பின்னர் இத்திட்டம் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இதற்கு கனடா வாழ் புங்குடுதீவு பழைய மாணவர்கள் ஒன்றியத்தினர் முழு நிதிப்பங்களிப்பை வழங்கினர்.

Source: https://samugammedia.com/the-kalliyar-river-project-was-launched-in-pungudutivu-a-solution-to-the-long-standing-struggle-1781100932

NO COMMENTS

Exit mobile version