சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரியும் இணைந்து மாபெரும் யோகாப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியானது 10 வயது முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 வயது பிரிவுகளுடன் 21–25, 26–31, 32–36, 37–41, 42–50, 51–60, 61–70, 71–80 மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோருக்கும் தனித்தனியான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வு 2026.06.16 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது முழுப்பெயர், வயது மற்றும் முகவரி ஆகிய விபரங்களுடன் 2026.06.15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்குபற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு யோகா, சிலம்பம், கராத்தே மற்றும் வர்மக்கலை மாஸ்டர் ஜெயம் ஜெகனை 077 5185 713 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும்.
Source: https://samugammedia.com/a-grand-yoga-competition-in-pudukkudiyurup-1780921071
