Home இலங்கை புளியங்கொட்டையை விழுங்கிய சிறுமி பலி!

புளியங்கொட்டையை விழுங்கிய சிறுமி பலி!

0
image

 கண்டி – கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில் ஏழு வயது சிறுமி ஒருவர் புளியங்கொட்டை (சீயம்பலா விதை) ஒன்றை விழுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருகலே பகுதியில் வசித்து வந்த சனுதி லக்ஷானி என்ற 7 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி, தனது சகோதரிகளுடன் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

இதன்போது, சமையலறையில் வைக்கப்பட்டிருந்த புளியம்பழத்தை பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்து விளையாடியதாகவும், அதிலிருந்த புளியங்கொட்டையை உட்கொண்ட நிலையில் அதனை விழுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை காப்பாற்றும் நோக்கில் வாகனம் ஒன்றில் பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-little-girl-dies-after-swallowing-tamarind-seed-1788425317

NO COMMENTS

Exit mobile version