Home இலங்கை பூனையை துன்புறுத்திய இரு இளைஞர்கள் அதிரடிக் கைது

பூனையை துன்புறுத்திய இரு இளைஞர்கள் அதிரடிக் கைது

0
image

சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான பூனை ஒன்றை துன்புறுத்தும் காணொளி தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தலாத்துஓயா பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு கிடைத்த சிறிது நேரத்திலேயே அதுல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 411, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 63(அ) பிரிவு மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-youths-who-tortured-a-cat-were-arrested-in-a-raid-1786255484

NO COMMENTS

Exit mobile version