மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த பாதுகாப்புச் சவால்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் சீரற்ற வான்வெளிச் சூழல் காரணமாகவே முன்னதாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது அப்பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை தணிந்து, வான்வெளிப் போக்குவரத்து பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, இந்தச் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து சேவைகள் வழமை போல் தொடரும் என்றும் பயணிகள் தங்களது பயணங்களை எவ்வித இடையூறாருமின்றி மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
