Home இலங்கை மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி

0
image

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, பிரதமர் இந்த விடயத்தைத் தெளிவுபடுத்தினார்.

மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று, அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது நடைமுறையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதைய சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது தேவையான திருத்தங்களைச் செய்து பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா என்பது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், தேர்தலை பிற்போடுவதற்கான அரசாங்க நோக்கம் எதுவும் இல்லை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்

Source: https://samugammedia.com/there-is-no-intention-to-postpone-the-provincial-council-elections–prime-minister-harini-amarasuriya-confirms-1781071995

NO COMMENTS

Exit mobile version