Home இலங்கை மீனாட்சி தோட்டம் உள்ளக கோவில் பாதை அடிக்கல் நாட்டு நிகழ்வு!

மீனாட்சி தோட்டம் உள்ளக கோவில் பாதை அடிக்கல் நாட்டு நிகழ்வு!

0
image

மீனாட்சி தோட்டம் உள்ளக கோவில் பாதை அடிக்கல் நாட்டு நிகழ்வு  உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு தவிசாளர் கப்பில நாகந்தலவின் ஆலோசனைக் அமைய அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் அஜந்த நெலும் குமாரவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மீனாட்சி தோட்ட ஆலய பிரதான பாதை அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.

கடந்த பல தசாப்தங்களாக இந்த உள்ளக வீதி பாரிய அளவில் குன்றும் குழியுமாக காணப்படுகிறது இதனைத் கருத்தில் கொண்டும் இப் பகுதியில் உள்ள சுமார் 135 குடும்பங்கள் நலன் கருதியும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல  ஆலோசனைக்கமைய வட்டவளை மீனாட்சி தோட்ட வட்டாரத்திற்க்கு பொறுப்பான அம்பகமு பிரதேச சபையின் உறுப்பினர் அஜந்த நெலும் குமார அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதற்கான ரூபாய் 10,0000/= பத்து லட்சம் ரூபாய் நிதியை அம்பகமு பிரதேச சபை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/foundation-stone-laying-ceremony-for-the-internal-temple-path-at-meenakshi-thottam-1789465091

NO COMMENTS

Exit mobile version