Home இலங்கை முல்லைத்தீவு புதிய அஞ்சல் அலுவலகம் அமைச்சரால் திறந்துவைப்பு

முல்லைத்தீவு புதிய அஞ்சல் அலுவலகம் அமைச்சரால் திறந்துவைப்பு

0
image

முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்  இன்றையதினம் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புதிய அஞ்சல் அலுவலகத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், புதிய கட்டடமும் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய அஞ்சல் அலுவலகத்திலிருந்து மக்களுக்கான அஞ்சல் சேவைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/m-mullaitheevu-new-post-office-will-be-inaugurated-by-the-minister-1789712132

NO COMMENTS

Exit mobile version