Home இலங்கை யாழில் டெங்கு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

யாழில் டெங்கு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

0
image

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டங்களின் கீழ் கோப்பாய், இருபாலை மற்றும் நீர்வேலி பகுதிகளில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்களால் கள விஜயங்கள் இடம்பெற்றன.

அதன்போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்ற போது, குடியிருப்பாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

Source: https://samugammedia.com/action-against-14-residents-for-neglecting-the-dengue-spreading-environment-in-jaffna-1780464520

NO COMMENTS

Exit mobile version