Home இலங்கை யாழ் ராணி ரயில் சேவையின் 4ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கிளிநொச்சியில்!

யாழ் ராணி ரயில் சேவையின் 4ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கிளிநொச்சியில்!

0
image

யாழ் ராணி ரயில்  சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் புகையிரதத்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 4ஆம் ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று (22) பிற்பகல் 4.00 மணியளவில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் ரயில்வே  திணைக்களத்தின் வடமார்க்கத்திற்கான மேற்பார்வையாளர் வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு அரச பணிகளுக்காக தினந்தோறும் பயணம் செய்யும் பல அரச உத்தியோகத்தர்களுக்கு, யாழ் ராணி ரயில் சேவை பொருளாதார ரீதியில் பயணச் செலவை கணிசமாகக் குறைக்க உதவுவதாகவும், அவர்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு இச்சேவை முக்கிய பங்காற்றி வருவதாகவும் நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக, பயணிகளும் அதிகாரிகளும் இணைந்து கேக் வெட்டி யாழ் ராணி புகையிரத சேவையின் நான்காவது ஆண்டு நிறைவை கொண்டாடினர்.

Source: https://samugammedia.com/jaffna-queen-train-services-4th-anniversary-celebration-in-kilinochchi-1784731204

NO COMMENTS

Exit mobile version