அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23) நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல் காரணமாக குறித்த வீடு பகுதியளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம், ஏற்பட்டுள்ள சேதங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் பின்னரே தீப்பரவலுக்கான உண்மையான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/fire-breaks-out-in-a-house-at-midnight-motorbike-also-damaged-1790159957
