Home இலங்கை வீட்டிலேயே சிறுமிக்கு பல நாட்கள் நடந்த கொடூரம்; நாடு திரும்பிய தாய்க்கு அதிர்ச்சி

வீட்டிலேயே சிறுமிக்கு பல நாட்கள் நடந்த கொடூரம்; நாடு திரும்பிய தாய்க்கு அதிர்ச்சி

0
image

13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் முதலாம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே வீட்டில் வசித்து வந்த குறித்த இளைஞர், வீட்டில் வேறு எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் தன்னை தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/cruelty-happened-to-the-girl-at-home-for-many-days-the-mother-was-shocked-when-she-returned-to-the-country-1788246013

NO COMMENTS

Exit mobile version